மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் 7வது ஊதியக்குழு அரசாணை 303 படி துப்புரவு தொழிலாளர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதிய நிலுவைத்தொகை வழங்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும், 420 ஊராட்சிகளிலும் தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.