மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கடந்த சனிக்கிழமை மாணவிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகளிடம் கல்வித்துறை அதிகாரிகள் இன்று (மே 02) பள்ளிக்கே நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, பேருந்து நிலையத்தில் மாணவிகள் ஓடிப்பிடித்து விளையாடும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.