மதுரை மாவட்டம் புளியங்குளம் அருகே நேற்று நள்ளிரவு இரண்டு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த வசந்த், பாலமுருகன், ராஜ்குமார் மூன்று பேரை அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
புளியங்குளத்தில் இரு பிரிவினரிடையே மோதல்; போலீசார் குவிப்பு! - இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல்
மதுரை: புளியங்குளத்தில் இரண்டு பிரிவினரிடையே இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
![புளியங்குளத்தில் இரு பிரிவினரிடையே மோதல்; போலீசார் குவிப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3432590-thumbnail-3x2-police.jpg)
இச்சம்பவம் தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த ஆதிவளவன், தவமணி மணிபாரதி, மணி பிரபு, அஜித் ஆகிய ஐந்து பேர் மீது எட்டு பிரிவின் கீழ் சிலைமான் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதில், ஆதிசிவம் என்பவரை கைது செய்த நிலையில் மற்ற நால்வரையும் தேடி வருகின்றனர்.
புளியங்குளம் கிராமத்தில் பதட்டமான சூழல் இருப்பதால், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த மூன்று பேருக்கு மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.