மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மயிலாடுதுறை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை, உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதி டி.ராஜா ஆகியோர் முன்னிலையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ திறந்து வைத்தார்.
இந்த விழாவில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சட்டத் தொழிலில் பாலின விகிதம் மோசமான நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சட்டப் படிப்பில் 50,000 ஆண்கள் சேர்ந்தால், மறுபுறம் 5,000 பெண்கள் மட்டுமே சேருகின்றனர். இதேபோன்ற புள்ளி விவரங்களே நாடு முழுவதும் உள்ளன. இந்த விகிதம் மாற வேண்டும். பெண்கள் சட்டம் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
ஏனென்றால், கடந்த காலங்களில் வழக்குரைஞர் தொழிலில் பெண்களுக்கு சமமான வாய்ப்பு கிடைத்ததில்லை. ஆனால், இப்போது மாவட்ட நீதித்துறையிலேயே 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாக உள்ளனர். இதுபோன்று முன்னோறும் பெண்கள் பன்முகப் பொறுப்புகளை மேற்கொண்டு வருங்கால பெண்களுக்கு சம வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆங்கிலத்துடன் தமிழையும் நீதிமன்ற மொழியாக அனுமதிக்க வேண்டும். இவ்விஷயத்தில், மத்திய சட்ட அமைச்சர் ஆதரவாக இருப்பதற்கு நன்றி கூறுகிறேன் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் வேண்டும்.. உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் ஸ்டாலின் வேண்டுகோள்..