மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "தேசிய கல்விக் கொள்கை என்பது ஏற்கனவே உள்ளது. இதனை குறித்து யாரோ சொல்லிதான் நடிகர்கள் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு என சொந்தக் கருத்து இல்லை. திமுகவினர் சிபிஎஸ்சி பள்ளிகளை நடத்திக்கொண்டு மும்மொழி குறித்து பேசிவருகிறார்கள். திமுகவினரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனியார் பள்ளியில்தான் பயில்கிறார்கள். திமுகவினர் ஏழைகளின் எதிரியாகச் செயல்படுகிறார்கள்.
'நடிகர்கள் சொந்தக் கருத்துகளை பேசுவதில்லை..!' - ஹெச். ராஜா விமர்சனம்
மதுரை: "தேசிய கல்விக் கொள்கை குறித்து யாரோ சொல்லித்தான் நடிகர்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு சொந்தக் கருத்து இல்லை" என்று, ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்.
h.raja
திமுக என்பது புளுகு மூட்டைகளின் கூடாரமாக உள்ளது. அத்திவரதர் தரிசனத்தில் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்கு முதியவர்கள் தரிசனத்திற்கு வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சுற்றறிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்து அறநிலையத்துறை என்பது இந்து அறத்தையே அழித்து வருகிறது. அத்திவரதர் தரிசனத்தின்போது காவல்துறை பணிகளில் இந்துக்களுக்கு எதிரான கொள்கை கொண்ட காவலர்களை நியமிப்பதை அரசு தடுக்க வேண்டும்," என்றார்.