மதுரை மாவட்டம் சோழவந்தான் - வாடிப்பட்டி செல்லும் சாலையில் மிகவும் அதிகமான போக்குவரத்து உள்ள நிலையில், ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் அலுவலர்களின் அலட்சியப் போக்கால் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து ஊர்பொதுமக்கள் பலமுறை கோரிக்கைவிடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி பாலத்தில் மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
குடிமகன்களின் கூடாரமாக மாறிவரும் திறக்கப்படாத ரயில்வே மேம்பாலம்! - போக்குவரத்து
மதுரை: சோழவந்தான் - வாடிப்பட்டி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பது மக்களிடையே சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சோழவந்தான் பகுதி வைகை நகர் வீட்டுவசதி சங்கத் தலைவர் எம்.கே.சுப்பையா பேசுகையில், பலமுறைக் கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை. பேரூராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எம்.எல்.ஏ. விடம் முறையிட்ட போது தற்காலிக சாலை அமைத்து கொடுத்தார். ஆனால் அந்த சாலை இப்போது பெய்த மழையால் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. எனவே இதன் வழியாக மருத்துவமனை செல்லும் ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கவனத்தில் கொண்டு உடனடியாக மேம்பாலத்தை திறக்க உதவு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பெண் குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரம்: நித்தியானந்தா ஆசிரமத்தில் இருவர் கைது!