மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது காடுபட்டி என்ற கிராமம். தற்போது வைகாசி மாதம் தொடங்கிவிட்ட நிலையில் காடுபட்டி கிராம மக்கள் அங்குள்ள ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். பாரம்பரியமாக இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த திருவிழாவை காடுபட்டி கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சோழவந்தான் மக்களின் வினோதமான நேர்த்திக் கடன்! - திருவிழா
மதுரை :சோழவந்தான் ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் தங்களது உடல் மேல் கத்தியால் அடித்து வினோதமான முறையில் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, சோழவந்தான் வைகையாற்றில் பக்தர்கள் நீராடி கத்தியால் உடலில் அடித்து பக்தர்கள், தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதேபோன்று பெண்கள் கரகம் எடுத்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கோவிலில் தரிசனம் செய்து விரதத்தை முடித்தனர். இந்த விழாவின் நோக்கமானது, தீய சக்திகள் விலகவும், மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், மழை பெய்து நாடு வளம் பெறவேண்டி தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவதே நோக்கமாகும். இதில், ஏராளமான ஆண்கள், பெண்கள் திருவிழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.