தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண்ட மதுரை! - கள்ளழகர் வைபவம்

மதுரை:  சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நாளை கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சியும், வாக்குப்பதிவும் ஒரே நாளில் நடைபெறுவதால், மாவட்ட நிர்வாகம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. திருவிழாவை முன்னிட்டு மதுரை நகரமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

madurai-chitirai-festival

By

Published : Apr 17, 2019, 5:08 PM IST

மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து சித்திரைத் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது. இவ்விழாவில் பத்தாம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து நாளை 11ஆவது நாளான திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனால் மதுரையின் மையப்பகுதியான நான்கு வெளி வீதிகளும் விழாக்கோலம் பூண்டுள்ளன. தேரோட்டத்தையொட்டி இப்பகுதியில் நாளை மின்சார இணைப்பு துண்டிக்கப்பட உள்ளது. மேலும், சுவாமி அம்மன் பெயர்கள் அலங்கரிக்கப்பட்டு தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சித்திரை திருவிழா
இதனிடையே நாளை கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகின்ற காரணத்தால், அந்த நிகழ்வில் நேர்த்திக்கடன் செலுத்தவுள்ள பக்தர்கள் உருமா கட்டுதல் நிகழ்வு கீழவெளி வீதியில் நடைபெறுகிறது. இதில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அதற்கான தங்களது நேர்த்திக் கடனை முன்னிட்டு உரிமை கட்டிவருகின்றனர். கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சியில் தேரோட்ட நிகழ்வு மற்றும் வாக்குப்பதிவு ஒரே நாளில் நடைபெறுவதால் நாளை பல லட்சக்கணக்கான மக்கள் மதுரையில்கூட உள்ளனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. தேரோட்டம் நடைபெறும் வெளிவீதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருப்பதால் வாக்குப்பதிவிற்கு எந்த இடையூறும் நேராதவாறு தேர்தல் ஆணையம் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நேரத்தை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details