மதுரையில் சித்திரைத் திருவிழா இன்று (ஏப். 15) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறவுள்ளது. இதனிடையே, கரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதியின்றி சித்திரைத் திருவிழா நடத்தப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயில், கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை பக்தர்கள் அனுமதியுடன் நடத்தக் கோரி இளைஞர்கள், மாணவர்கள், மருதுசேனை அமைப்பைச் சேர்ந்தவர்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். மாணவர்கள் சிலம்பாட்டம் நிகழ்த்தியபடி கோஷங்களை எழுப்பினர்.