தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சித்திரைத் திருவிழா 3ஆம் நாள்: தங்கச் சப்பரத்தில் மீனாட்சி சொக்கநாதர் - மதுரை

மதுரை: மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா 3ஆம் நாளான இன்று (ஏப்.16) காலை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தங்கச் சப்பரத்தில் வலம் வந்தனர்.

சித்திரைத் திருவிழா 3ஆம் நாள்: தங்கசப்பரத்தில் மீனாட்சி சொக்கநாதர்
சித்திரைத் திருவிழா 3ஆம் நாள்: தங்கசப்பரத்தில் மீனாட்சி சொக்கநாதர்

By

Published : Apr 17, 2021, 11:40 AM IST

கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் தினந்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பர். சித்திரைத் திருவிழா நடைபெறும் பத்து நாள்களும் மதுரை மாநகரே விழா கோலம் சூடி காட்சியளிக்கும்.

தற்போது கரோனா தொற்று காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தொலைக்காட்சியில் சித்திரைத் திருவிழா நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் நிலையில், பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்தவாறே மீனாட்சி சொக்கநாதரை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா 3ஆம் நாளான இன்று (ஏப்.17) காலை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தங்கச் சப்பரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிகழ்வில்,

”உனக்குப் பணி செய்ய உன்தனை எந்நாளும்

நினைக்க வரமெனக்கு நீ தா - மனக்கவலை

நீக்குகின்ற தென்மதுரை நின்மலனே எவ்வுலகும்

ஆக்குகின்ற சொக்கநாதா - சொக்கநாத வெண்பா” என சொக்கநாதரைப் பாராட்டி பாடல் பாடப்பட்டது.

இதையும் படிங்க:வாக்கு எண்ணிக்கை: இந்திய, தமிழ்நாடு தேர்தல் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்


ABOUT THE AUTHOR

...view details