தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீனப் பெண்ணை பாதுகாப்பாக அனுப்பிய சுகாதாரத் துறை! - சீன பெண்ணை பாதுகாப்பாக அனுப்பிய சுகாதாரத் துறை

மதுரை: சீனாவிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சுற்றுலாப் பயணியாக வந்த பெண்ணை, சுகாதாரத் துறையினர் விமான நிலையம் மூலம் சென்னைக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

சென்னைக்கு அனுப்பப்பட்ட சீன பெண்
சென்னைக்கு அனுப்பப்பட்ட சீன பெண்

By

Published : Feb 9, 2020, 3:33 PM IST

Updated : Mar 17, 2020, 6:09 PM IST

சீனாவின் அன்கியுன்ங் மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர் வு சென் சூ (வயது 42). இவர் ஜனவரி மாதம் 28ஆம் தேதி விமானம் மூலம் கொல்கத்தா வந்துள்ளார். பின்னர், பல்வேறு இடங்களில் பார்வையிட்டு இறுதியாக ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார்.

அங்கு, இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த மண்டபம் சுகாதாரத்துறையினர், காவல் துறையினரின் உதவியுடன், சோதனை செய்தனர். அப்போது, இவர் சீனாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து மண்டபம் வட்டார சுகாதார அலுவலர் மகேந்திரன், மேற்பார்வையாளர் தியாகராஜன் ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் உள்ள மருந்துவக்குழுவினருக்குத் தகவல் தெரிவித்தனர். மதுரை விமான நிலையம் வந்த 'வு சென் சூ' வை சுகாதாரக் குழுவினர் தீவிர பரிசோதனை செய்து, உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னைக்கு அனுப்பப்பட்ட சீன பெண்

மருத்துவக் குழுவினர் பரிசோதனையில் அவருக்கு கொரானா வைரஸ் அறிகுறி இல்லையென்றாலும்; இந்திய அரசின் அறிவுறுத்தலின் படி அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: ஈரோட்டில் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு? - மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணிப்பு

Last Updated : Mar 17, 2020, 6:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details