மதுரை மாவட்டம் சௌராஷ்டிராபுரம் பகுதி பாலாஜி நகர் 4ஆவது தெருவைச் சேர்ந்தவர் சேட்டுக்கனி. இவரது மகன் ரியாஸ் (10). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிமின் என்பரது மகள் பர்வீதா பீவீ, ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
இருவரும் நேற்று (பிப்.08) வண்டியூர் பகுதியிலுள்ள கொங்கு மண்டபம் அருகில் வைகை ஆற்றங்கரை ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ரியாஸ் திடீரென ஆற்றிலுள்ள குட்டையில் தவறி விழுந்தார். அவரை காப்பாற்ற முயற்சித்த பர்வீதா பீவீயும் தவறி குட்டையில் விழுந்தார். இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.