தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள தொழிலபதிபர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

மதுரை: கரோனா ஊரடங்கு உத்தரவினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் அடங்கிய குழு, முக்கியத் தொழிலதிபர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடல் நடைபெற்றது.

cm palanisamy
cm palanisamy

By

Published : Jun 6, 2020, 3:44 PM IST

கரோனா தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், பல்வேறு பொருளாதார நெருக்கடியை தமிழ்நாடு அரசு சந்தித்துவருகிறது. அதிலிருந்து மாநிலத்தை மீட்டெடுப்பதற்காக 20க்கும் மேற்பட்ட தொழில்துறை நிறுவனங்களுடன், காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர், அமைச்சர்கள் அடங்கிய குழு ஆலோசனை நடத்தியது.

இதில், முதலமைச்சர் பழனிச்சாமி, அமைச்சர்கள் குழுவில் ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார், எம்.சி. சம்பத், தங்கமணி, பெஞ்சமின் ஆகியோர் கலந்துகொண்டனர். கெவின் கேர், தியாகராஜா மில், டிவிஎஸ் நிறுவனம், ராம்கோ சிமெண்ட் உள்பட 20க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

இந்தக் கூட்டத்தில் தொழில்துறை நிறுவனங்கள் கரோனா நோய்த்தொற்று காலத்தில் எவ்வாறு இயங்க வேண்டும், பொருளாதார நெருக்கடியில் இருந்து தொழில் துறை நிறுவனங்களை எவ்வாறு மீட்டெடுப்பது உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:வீர மரணமடைந்த மதியழகனுக்கு அரசு சார்பில் மரியாதை - முதலமைச்சர் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details