மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவ மழை தொடங்கும். இந்த பருவமழை மூலமாக தான் நமக்கு 48 விழுக்காடு மழை பொழிவு கிடைக்கிறது. அப்படி கிடைக்கின்ற மழை நீரை நாம் சேமித்து வைத்து உயிரினங்களுக்கும், குடிநீர் பயன்பாட்டிற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவதற்காக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
‘மழைநீரை சேமியுங்கள்’ - அமைச்சர் கோரிக்கை - மதுரை விமான நிலையம்
மதுரை: மழைநீரை சேமித்து வைத்து குடிநீர் பயன்பாட்டிற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவதற்காக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆர். பி உதயகுமார்
அவரின் அறிவுரைக்கு இணங்க கடலோர மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற அதிக பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகமும், 32 வருவாய் மாவட்டமும் தயார் நிலையில் உள்ளது’ என்றார்.