கீழடி உள்ளிட்ட இடங்களில் நடந்துவந்த ஆறாம்கட்ட அகழாய்வுப் பணி நிறைவடைந்தது. இந்நிலையில் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் ஏழாம்கட்ட அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
அப்பகுதிகளில் நில உரிமையாளரிடமிருந்து ஆய்வுக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை தொல்லியல் துறை அலுவலர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
பிப்ரவரி 13இல் 7ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடக்கம் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மண்டிக்கிடந்த புதர்கள், முள்செடிகள் அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது.
2020 ஜனவரி மாதம் கீழடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியிருந்தது.
ஆறாம்கட்ட அகழாய்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கிவைத்தார். பின்னர் அப்பணிகள் அதே ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவுபெற்றன.
இதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் (பிப். 13) ஏழாம்கட்ட அகழாய்வுப் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார்.
இதையும் படிங்க: கீழடியை பார்வையிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்