மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 6) பங்கேற்றார். இதில் 21 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் 32 நிறைவுபெற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், பள்ளிக் கல்வித் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவற்றின் சார்பில் 304 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான 31 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பிற்பகல் 3 மணியளவில் கரோனா தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், தொழில்துறை மற்றும் விவசாயத் துறை சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.