தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோசமான வானிலை: இரு உள்நாட்டு விமானங்கள் ரத்து! - நவம்பர் 25 ரத்து விமானங்கள்

மோசமான வானிலை காரணமாக சென்னை - சீரடி, சீரடி - சென்னை வழித்தடங்களில் பயணிக்க இருந்த இரண்டு விமானங்கள் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இரு உள்நாட்டு விமானங்கள் ரத்து
இரு உள்நாட்டு விமானங்கள் ரத்து

By

Published : Nov 25, 2021, 6:28 PM IST

சென்னை: சென்னை - சீரடி செல்லும் தனியாா் (ஸ்பைஸ்ஜெட்) விமானமானது இன்று (நவ.25) பகல் 1.55 மணிக்கு, 190 பயணிகளுடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது.

பயணிகள் அனைவரும் பகல் 12.30 மணியளவிலேயே வந்தபோதும், சீரடியில் நிலவும் மோசமான வானிலையின் காரணமாக விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் சீரடி செல்லும் விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், விமானம் நாளை (நவம்பர் 26) சீரடிக்கு செல்லும் எனவும் அறிவித்தனா்.

மீண்டும் கரோனா பரிசோதனை

சீரடிக்கு செல்பவா்கள் 48 மணி நேரத்திற்கு முன்னரே கரோனா பரிசோதனை எடுத்து நெகடிவ் சான்றிதழுடன்தான் பயணிக்க வேண்டும். இந்நிலையில் நாளைய பயணத்துக்கு பலருக்கு கரோனா சோதனை சான்றிதழ் காலாவதியாகிவிடும்.

இதனால் மீண்டும் புதிய சான்றிதழ் தரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் கலைந்து சென்றனர்.

இதேபோன்று சீரடியிலிருந்து இன்று (நவ. 25) மாலை 5.55 மணிக்கு, 105 பயணிகளுடன் சென்னை வரவேண்டிய தனியாா் (ஸ்பைஜெட்) பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டது. இதனால் விமான பயணிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

இதையும் படிங்க:தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

ABOUT THE AUTHOR

...view details