மதுரை:திண்டுக்கல்லைச் சேர்ந்த சிவபெருமாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், "நல்லமனார் கோட்டைப் பகுதியில் சுமார் ஆயிரம் விவசாயிகள் வேளாண்மை செய்துவருகின்ற நிலையில் வேடசந்தூர் தாலுகாவின் உதவி வேளாண் அலுவலர் தெய்வேந்திரன் விவசாயிகளுக்கான கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகள் அல்லாத தகுதியற்ற பலரைச் சேர்த்து முறைகேடாக வங்கிக் கடன் வழங்கியுள்ளார்.
மேலும் இந்த வங்கிக் கடன் வழங்குவதில் ஆளும் கட்சியின் அரசியல் பிரமுகர்கள் தலையீடும் உள்ளது. அவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே முறைகேடாக கடன் வழங்கப்பட்டுவருகிறது. விவசாயிகளுக்கான பிரதமரின் திட்டத்தில் முறைகேடு செய்த வேடசந்தூர் உதவி வேளாண் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "விவசாயிகளுக்காக மத்திய மாநில அரசுகள் வழங்கும் திட்டங்கள் என்ன, அதற்காக எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது, எத்தனை விவசாயிகள் இந்தத் திட்டங்களின்கீழ் பயன்பெற்றுள்ளனர், விவசாயிகளுக்காக மானியமாக எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது,
விவசாயிகள்தான் பயன்பெறுகிறார்கள் என்பதை உறுதிசெய்ய மத்திய, மாநில அரசுகள் பின்பற்றும் நடைமுறை என்ன, கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன, எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், நடவடிக்கையின் தற்போதைய நிலை என்ன,