தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேஜஸ் ரயிலுக்கு 'தமிழ்ச்சங்கம்' என பெயர் சூட்ட வேண்டும்: வெங்கடேசன்! - பெயர் மாற்றம்

மதுரை: தேஜஸ் ரயிலுக்கு 'தமிழ்ச்சங்கம்' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.

venkatesan

By

Published : Aug 27, 2019, 9:29 PM IST

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் வீ.ரா.லெனினை நேரில் சந்தித்து மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் தேஜஸ் ரயில் தமிழ்ச்சங்கம் என்ற பெயர் மாற்றம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கோட்ட மேலாளர், அலுவலர்களுடன் ஆய்வுகள் மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதுரை ரயில் நிலைய வெளிப்பகுதியில் வாகனங்கள் வந்து செல்வதற்கு போதிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். வாகனங்கள் பயணிகளை வந்து இறக்கிவிடவும் ஏற்றிச் செல்வதற்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யக்கூடாது. ரயில் நிலையம் முகப்பில் இருந்த பாண்டியர்களின் அடையாள சின்னமான மீன் சின்னத்தை மீண்டும் அமைக்க வேண்டும். தேஜஸ் ரயில் பெயரை மாற்றி 'தமிழ்ச்சங்கம்' என்ற பெயர் சூட்டவேண்டும்.

தேஜஸ் ரயிலுக்கு 'தமிழ்ச்சங்கம்' என பெயர் சூட்ட வேண்டும்

இதையடுத்து தேஜஸ் ரயிலின் உள்ளே உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளில் இந்திப் படங்களும், இந்தி பாடல்கள்தான் ஒளிபரப்பப்படுகின்றன. அதில் தமிழ் மொழிப் படங்கள், பாடல்கள் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை ரயில் நிலையத்தில் மருந்தகம் செயல்பட்டுவந்தது அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும். வருகின்ற செப்டம்பர் 4ஆம் தேதி திருச்சியில் ரயில்வே மேம்பாடுகள் குறித்து எம்.பி.க்களின் கூட்டம் நடைபெறுகின்றது, அங்கு மதுரை ரயில் நிலைய வளர்ச்சிகள் குறித்து தெரிவிக்கப்படும்" என்ரார்.

ABOUT THE AUTHOR

...view details