தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜபாளையம் - சங்கரன்கோவில் ரயில் பாதை பராமரிப்பு பணிகளால் போக்குவரத்து மாற்றம் - தெற்கு ரயில்வே

ராஜபாளையம் - சங்கரன்கோவில் ரயில் நிலையங்கள் இடையே நடந்துவரும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்
ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

By

Published : Sep 10, 2022, 10:10 AM IST

மதுரை: இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ராஜபாளையம் - சங்கரன்கோவில் பிரிவில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதன் காரணமாக மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்படும் மதுரை - செங்கோட்டை (06663) ரயில், செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - மதுரை (06664) ரயில் செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 15 வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.

இந்த ரயில்கள் ஏற்கனவே செப்டம்பர் 10ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. தற்போது மேலும் 5 நாட்களுக்கு ரத்து தொடர்கிறது. அதேபோல விருதுநகர் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731) மற்றும் திருச்செந்தூர் பாலக்காடு விரைவு ரயில் (16732) ஆகியவை செப்டம்பர் 14 அன்று திண்டுக்கல் - திருச்செந்தூர் இடையேயும், செப்டம்பர் 15 அன்று மதுரை - திருச்செந்தூர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் நவீன மாநாட்டு மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ABOUT THE AUTHOR

...view details