Southern Railway:மதுரை:இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணிகள் மற்றும் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் கிராசிங் நிலையம் ஆக மேம்படுத்தும் பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் ஜனவரி 26, 27, பிப்ரவரி 4 முதல் 9 வரை, பிப்ரவரி 14 முதல் 17 வரை திருநெல்வேலி - திருவனந்தபுரம் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.