தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயணிகள் கவனத்திற்கு - பாலம் வேலை காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம்! - Gandhidham Express

பாலம் வேலை காரணமாக தென் மாவட்டங்களில் பயணிக்கும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Change in train services due to bridge work says southern railways
Change in train services due to bridge work says southern railways

By

Published : Apr 21, 2023, 9:58 PM IST

மதுரை:எர்ணாகுளம் - திருச்சூர் பிரிவில் கருக்குட்டி மற்றும் சாலக்குடி இடையே உள்ள பாலம் எண்.132-ல், 27.04.2023அன்று காலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெற உள்ள பராமரிப்புப் பணியின் காரணமாக, ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சேவைகள் ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம் பின்வருமாறு,

வரும் 26.04.2023ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்படும் பயண ரயில் எண். 16791 திருநெல்வேலி - பாலக்காடு சந்திப்பு பாலருவி எக்ஸ்பிரஸ், வரும் 27.04.2023ஆம் தேதி பாலக்காடு சந்திப்பில் இருந்து புறப்படும் ரயில் எண். 16792 பாலக்காடு சந்திப்பு - திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில் சேவைகள் பின்வருமாறு, 27.04.2023 அன்று திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் எண். 20923 திருநெல்வேலி - காந்திதாம் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு வழியாக இயக்கப்படுவதற்கு மாறாக விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் மற்றும் ஈரோடு வழியாக இயக்கப்படும்.

இதன் காரணமாக இந்த ரயில் நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம், ஆலப்புழா, எர்ணாகுளம் சந்திப்பு, ஆலுவா, திருச்சூர் போன்ற நிலையங்களில் நிறுத்தங்களைத் தவிர்க்கும். மாற்றுப் பாதையில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: விசாரணைக் கைதிக்கு சகல பாதுகாப்பு: புல்லட் புரூஃப் ஜாக்கெட்டுடன் நீதிமன்றத்தில் ஆஜர்!

ABOUT THE AUTHOR

...view details