தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் பாதையில் நிலச்சரிவு: போக்குவரத்தில் மாற்றம் - Change in rail transport due to Railroad Landslide

நாகர்கோவில் அருகே ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவின் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

ரயில் போக்குவரத்தில் மாற்றம்
ரயில் போக்குவரத்தில் மாற்றம்

By

Published : Nov 23, 2021, 6:37 AM IST

மதுரை: நாகர்கோவில் அருகே ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவின் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது எனத் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் குழித்துறை அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று (நவம்பர் 22) இரவு குருவாயூரிலிருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16128), இன்று (நவம்பர் 23) காலை சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) ஆகியவை திருநெல்வேலி - குருவாயூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்துசெய்யப்பட்டன

ரயில் போக்குவரத்தில் மாற்றம்

நேற்று இரவு மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16729) திருநெல்வேலி வரை இயக்கப்பட்டது. மறு மார்க்கத்தில் இந்த ரயில் (16730) திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 4 மணிக்குப் புறப்பட்டு மதுரை வந்து சேரும் எனத் தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது.

இன்று காலை திருச்சியிலிருந்து புறப்பட வேண்டிய திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22627), இன்று முற்பகல் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22628) ஆகியவை திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகின்றன.

ABOUT THE AUTHOR

...view details