தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில்வேயில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வாய்ப்பு! - மதுரை கோட்ட ரயில்வே

ரயில்வே துறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் திறமை உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் தெரிவித்துள்ளார்.

ரயில்வேயில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த ஸ்டார்டப் நிறுவனங்களுக்கு வாய்ப்பு..!
ரயில்வேயில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த ஸ்டார்டப் நிறுவனங்களுக்கு வாய்ப்பு..!

By

Published : Jun 16, 2022, 6:18 PM IST

மதுரை:மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் இன்று(ஜூன் 16) தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 'ரயில் பாதை விரிசலைக் கண்டுபிடிப்பது, ரயில் பாதை தாங்கு திறனைக் கண்காணிப்பது, புறநகர் ரயில் போக்குவரத்தில் விபத்தில்லாமல் அதிக ரயில்களை இயக்குவது, துல்லியமாக ரயில் பாதையை ஆய்வு செய்வதற்கு தொழில்நுட்பம்,

அதிக எடையைத் தாங்கும் சரக்கு ரயில் பெட்டிகளுக்கு நெகிழ்வு அடுக்கு, ரயில் மின் பாதைகளைக் கண்காணிப்பது, எடை குறைவான ரயில் சரக்கு பெட்டிகள் தயாரிப்பது, ரயில் பாதை சரளைக் கற்களை சுத்தப்படுத்தும் இயந்திரம், ஊழியர்களுக்கான முன் பயிற்சி மற்றும் தன்னிலை அலுவல் காலப் பயிற்சி,

ரயில் பாலங்களை ஆய்வு செய்யத் தற்கால புதிய தொழில்நுட்பம், பயணிகள் சேவையை மேம்படுத்த மின்னணு தரவுகளை பகுப்பாயும் தொழில்நுட்பம் போன்ற ரயில்வே துறைக்குத் தேவையான தொழில் நுட்பம் மற்றும் செயலிகளை உருவாக்க புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வாய்ப்பு தரப்பட இருக்கிறது.

இதுபோன்ற 100 தொழில் நுட்பங்கள் தேவைப்படுகின்றன. இதற்கான விரிவான தகவல்களை www.innovation.indianrailways.gov.inஎன்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்' என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் தெரிவித்தார்.

மேலும், செய்தியாளர்களிடம் பேசும்போது, ”மதுரை - தேனி பகுதியில் போடிநாயக்கனூர் வரை ரயில் பாதைப் பணிகள் முடிவடைந்த பிறகு புதிய ரயில்கள் இயக்குவது பற்றி முடிவு செய்யப்படும். பல்வேறு ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

பயணிகளின் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ரயில் இடைநிறுத்தங்கள் வழங்குவது கூடாது என்பது ஒரு கொள்கை முடிவாக உள்ளது. பல்வேறு ரயில் நிலையங்களில் நடை மேடைகளை உயர்த்துவது, நீட்டிப்பது, மேற்கூரை அமைப்பது, மின்சார சேமிப்பிற்கான எல்.இ.டி விளக்குகள் அமைப்பது போன்ற பயணிகள் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

கோயம்புத்தூர் மற்றும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில் அளவுக்கு அதிகமான ரயில்கள் கையாளப்படுகிறது. இந்த ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்குப் போதிய இடவசதியும் இல்லை. இதனால் மதுரை - கோயம்புத்தூர் பிரிவில் கூடுதல் ரயில்கள் இயக்குவது சாத்தியமில்லாமல் இருக்கிறது.

கடந்த மே மாதம் 25ஆம் தேதியன்று ரூ.358.63 கோடி மதிப்பில் நடைபெறப்போகும் மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு வேலைக்கான ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்களுடன் நாளை (ஜூன் 17) சென்னையில் நேர்காணல் நடைபெற இருக்கிறது.

ரயில்வேயில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வாய்ப்பு!

வருகிற ஜூலை 25அன்று ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. அதன்பின்பு மறு சீரமைப்புப் பணிகள் தொடங்கும். மதுரை - தேனி புதிய ரயில் பாதை பொதுமக்கள் உபயோகத்திற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஆபத்தானது என அறியாமல் ரயில் பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், இந்தப் பகுதியில் சில இடங்களில் ரயில் சுரங்கப்பாதை அமைப்பது, பராமரிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விரைவில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை: அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details