தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் பெண்ணிடம் 11 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு!! - Jewel Theft In Madurai

மதுரை: கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் 11 சவரன் தங்கச் செயினைப் பறித்த அடையாளம் தெரியாத நபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் பெண்ணிடம் 11 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு  மதுரையில் தங்கச் சங்கிலி பறிப்பு  தங்கச் சங்கிலி  Chain Snatching In Madurai  Chain Snatching  CCTV Footage  Jewel Theft In Madurai  செயின் சினாச்சிங்
Chain Snatching

By

Published : May 18, 2020, 2:42 PM IST

Updated : May 18, 2020, 3:22 PM IST

மதுரை மாவட்டம், உத்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஆதீஸ்வரன். இவரது மனைவி, நேற்று அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக நடந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அப்பெண்ணின் கழுத்திலிருந்த 11 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பியோடினார்.

இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த புதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்பகுதியில் இருந்த வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவியில் செயின் பறிப்பு தொடர்பான காட்சிகள் பதிவாகியிருந்ததை அறிந்தனர். அதை கைப்பற்றிய காவல் துறையினர் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை அடையாளம் காணும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:ரூ.50 கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது!

Last Updated : May 18, 2020, 3:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details