மதுரை வில்லாபுரம் பராசக்தி நகர் செந்தமிழ் தெருவைச் சேர்ந்த கணேஷ் பாபு மனைவி ரங்கமுனீஸ்வரி (38). இவர் நேற்று அதிகாலை வில்லாபுரம் பிரதான சாலைப் பகுதியில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவர் அணிந்திருந்த நான்கு பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இது குறித்து ரங்கமுனீஸ்வரி அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
வில்லாபுரத்தில் பெண்ணின் தாலி செயின் பறிப்பு மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள நிலையிலும் கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்வது காவல் துறையினருக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ரத்தத் சொட்ட மதுவை கொள்ளையடித்த மது வெறியன்