தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முகக்கவசம் அணிந்து சொந்த பாட்டியிடமே செயின் பறித்த பேத்தி! - முகக்கவசம் அணிந்து சொந்த பாட்டியிடமே செயின் பறித்த பேத்தி

மதுரை: சொந்த பாட்டியிடமே 11 பவுன் தங்க செயினை கொள்ளையடித்த பேத்தியை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

crime
crime

By

Published : Jun 11, 2021, 2:02 AM IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டியைச் சேர்ந்தவர் முனியம்மாள். மாற்றுத்திறனாளியான இவரிடம் முகக்கவசம் அணிந்துவந்த பெண் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக வந்துள்ளதாகக் கூறி முனியம்மாளின் வீட்டிற்குள் வந்தார். அதன் பின் முனியம்மாளை அந்தப் பெண் கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 11 பவுன் தங்கநகையை எடுத்துச்சென்றார்.

முனியம்மாள் பாட்டி

இது குறித்து தகவலறிந்த உசிலம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முனியம்மாளிடம் நடந்தவற்றைக் கேட்டறிந்தனர். அதன்பின் விசாரணை மேற்கொண்ட காவலர்கள் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது முனியம்மாளின் பேத்தி உமாதேவி என்பது தெரியவந்தது.

தொடர்ந்து உமாதேவியை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சொந்த பாட்டியிடமே பேத்தி கைவரிசை காட்டியது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

கைதுசெய்யப்பட்ட உமாதேவி

ABOUT THE AUTHOR

...view details