மதுரை மாவட்டம், கோச்சடை பகுதியைச் சேர்ந்தவர் கலைவதி. இவர் தனது கணவருடன் புதூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு மிண்டும் புதூர் ஐயப்பன் கோயில் வழியாகச் செல்லும் போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கலைவதி அணிந்திருந்த ஐந்து சவரன் நகையை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளனர்.
பட்டப்பகலில் பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு - போலீஸ் விசாரணை! - பெண்ணிடம் நகை பறிப்பு
மதுரை: பெண்ணிடம் ஐந்து சவரன் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களின் சிசிடிவி புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.
![பட்டப்பகலில் பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு - போலீஸ் விசாரணை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4183526-thumbnail-3x2-cctv.jpg)
சிசிடிவி புகைப்படங்கள்
இது குறித்து தகவலறிந்து வந்த புதூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அய்வு செய்தனர். அதில் சிசிடிவியில் பதிவான அந்த இளைஞர்களின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.