மதுரை:ராமநாதபுரத்தை சேர்ந்த மெஹ்ருன் நிஷா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் ரிபாயுதீன் மீது கடந்த 2013ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2016ஆம் ஆண்டு முதல் இலங்கை சிறையில் உள்ளார்.
இலங்கை சிறையில் இருந்து இந்திய சிறைக்கு மாற்றுவது குறித்து இந்திய தூதரகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, எனது மனுவை பரிசீலனை செய்து, இலங்கை சிறையில் உள்ள எனது கணவரை இந்திய சிறைக்கு மாற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.