தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருங்காலக்குடி மேம்பாலம் கட்ட ரூ.19 கோடி ஒதுக்கீடு: வெங்கடேசன் எம்பி தகவல்! - S. Venkatesan MP

மதுரை: கருங்காலக்குடி மேம்பாலம் கட்ட மத்திய அரசு ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என வெங்கடேசன் எம்பி தகவல் தெரிவித்துள்ளார்.

வெங்கடேசன் எம்பி
வெங்கடேசன் எம்பி

By

Published : Nov 12, 2020, 12:42 PM IST

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கருங்காலக்குடி பகுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக பாலம் அமைக்கப்படும் என்றும் அதற்காக ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எனக்கு எழுதியக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இது கருங்காலக்குடி - மேலூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. எங்களின் தேர்தல் வாக்குறுதியும் கூட. தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு என் தரப்பில் இப்பிரச்சினையில் கூடுதல் அக்கறை செலுத்தப்பட்டு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடிதம் வாயிலாகவும் நேரிலும் அமைச்சரின் கவனத்துக்கு இக்கோரிக்கையை கொண்டுசென்றேன்.

அதன் விளைவாகக் கடந்த ஜனவரி மாதம் ஆய்வுமேற்கொண்டுஇப்பகுதி தொடர் விபத்து நடக்கும் பகுதி என்பதையும் தவிர்ப்பதற்கான ஏற்பாடு தேவை என்பதையும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஏற்றுக்கொள்ளுமாறு முயற்சி மேற்கொண்டு வெற்றிக்கிட்டியது.

பிறகு பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. கோவிட் பெருந்தொற்றுக்காக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்திற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி கருங்காலக்குடி பாலம் தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சருக்கு மீண்டும் கடிதம் எழுதி, நேரிலும் வலியுறுத்தினேன்.

நவம்பர் 6ஆம் தேதி அதற்குப் பதில் அனுப்பியுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
கருங்காலக்குடியில் சாலை விபத்தினை தவிர்க்க, வாகனங்கள் செல்ல சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்றும் இதற்கு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை காலத்தில் பெறப்பட்ட இத்தகவல் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மேலூர் தொகுதி மக்களுக்கான பரிசு மட்டுமல்ல; மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைவருக்கும் கிட்டிய பரிசு” என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details