மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த விஜயகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், 'இணையதளத்தின் பயன்பாட்டால் உலகம் சுருங்கி ஒவ்வொருவரின் உள்ளங்கையில்உள்ளது. முன்பு இணையதளத்தை பயன்படுத்த இணையதள மையங்களுக்குச் செல்ல வேண்டும். ஆனால் செல்போன் பயன்பாடுகளின் காரணமாக இன்று ஒவ்வொருவரும் இருந்த இடத்திலேயே இணையத்தை பயன்படுத்துகின்றனர்.அரசின் பணிகள் உட்பட அனைத்தும் இணையத்தை சார்ந்தே இருக்கின்றன. அதே சமயம் அதன் தீங்குகளும் வளரத்தொடங்கின.
குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், ஆபாச இணையதளங்களின் பயன்பாடு, புளூவேல், வெப் புல்லிங் போன்ற விளையாட்டுக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவது என இணையதளத்தின் தீங்குகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. இது பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது. Parental window என்ற மென்பொருள் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது இணைய சேவை வழங்குவோரின் கடமை.
இதுகுறித்து 2017 ஆம் ஆண்டு மத்தியதொலைதொர்பு துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது ..
ஆகவே, இணைய சேவை வழங்க உரிமம் பெற்றவர்கள். Parentel window மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் "எனகூறியிருந்தார்.