மதுரை சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் மதுரை மாவட்டம் இளமனூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையின் காசாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி கடையை மூடிவிட்டு கடையில் இருந்த சுமார் நான்கு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனம் மூலம் கடை ஊழியர்கள், கண்காணிப்பாளர் என மூன்று பேரும் வந்துள்ளனர்.
பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் சுமார் எட்டு கிலோமீட்டர் பயணம் செய்து தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அருகே தன்னைப் பின் தொடர்ந்து வந்த ஊழியர்களின் வருகைக்காக காத்திருந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக தாக்கி அவர் வைத்திருந்த பணப்பையை பறிக்க முயன்றனர்.
இருப்பினும் சக ஊழியர்கள் கொள்ளை கும்பல் மீது வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தி கொள்ளை சம்பவத்தை தடுக்க முயன்றனர்.
பணம் கிடைக்காத நிலையில் ஏமாற்றத்துடன் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. பின்னர் படுகாயமடைந்த ராஜாவை மீட்ட அக்கம்பக்கத்தினர், அரசு இராசாசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மதுரையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இதே போன்று பகுதியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து டாஸ்மாக் ஊழியர்களை குறிவைத்து அரங்கேறும் இந்த கொள்ளைச் சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் பல சம்பவங்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையாகக் கொண்டு காவல் துறையினர் தேடி வரும் நிலையில் இச்சம்பவத்தின் அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் தூக்கிட்ட நிலையில் கண்டுபிடிப்பு