CCTV Cameras - மதுரை: திருச்சியை சேர்ந்த பயேல் பிஸ்வாஸ், குயின் ஆயுர்வேத க்ராஸ் ஸ்பா செண்டர் என்னும் பெயரில் ஸ்பா மையம் நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "ஸ்பா மையம் தொடங்குவதை முறைப்படுத்துவதற்கான சரியான விதிகள் ஏதுமில்லை. ஸ்பா மையம் தொடங்குவதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்குவதோடு காவல்துறையினரின் தலையீட்டைத் தவிர்க்கவும் மனுவில் கோரியுள்ளார்.
மேலும், ஸ்பா, மசாஜ் சென்டர்கள், தெரபி சென்டர்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும் அது இயங்கும் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும்.
ஸ்பா, மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் சிசிடிவி கேமரா வைப்பது தனிநபர் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் அமையும். எனவே நுழைவு வாயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தலாம் என்றார். மசாஜ் சென்டர்கள் தங்களது பணியை வெளிப்படைத்தன்மையுடன், சட்டவிரோத செயல்களுக்கு இடம் கொடுக்காமல் நடத்த வேண்டும்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக புகார்கள் மற்றும் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்தால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம்.
இந்த விவகாரத்தில் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மனுவை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து தடையில்லா சான்றிதழ் வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: ஆபாசமாகப் பேசியதாகப் புகார் - ரவுடி பேபி சூர்யா கைதின் முழுப்பின்னணி