தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் கொலை வழக்கு: மூன்று காவலர்களின் பிணை மனுக்கள் தள்ளுபடி - பிணை கேட்டு காவலர்கள் மனு

மதுரை: உயிரிழந்த பென்னிக்ஸ் உடலில் 13 காயங்களும், ஜெயராஜ் உடலில் 17 காயங்களும் இருந்ததாக உடற்கூறாய்வு அறிக்கை மூலம் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.

high court
high court

By

Published : Aug 25, 2020, 4:36 PM IST

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையிலுள்ள காவல் துறையை சேர்ந்த முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜா ஆகியோரது பிணை மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

சிபிஐ முழுமையான அறிக்கையை தாக்கல் செய்தபின் பிணை கேட்டால், பிணை வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பென்னிக்ஸ் உடலில் 13 காயங்களும், ஜெயராஜ் உடலில் 17 காயங்களும் இருந்தன என உடற்கூறாய்வு அறிக்கை மூலம் சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:’நீதிமன்ற தீர்ப்பு சபாநாயகருக்கு கொடுக்கப்பட்ட அடி’ - ஆர்.எஸ் பாரதி!

ABOUT THE AUTHOR

...view details