தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தவறான மருத்துவத்தால் உயிரிழந்த பெண்ணின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: நீதிமன்றம் உத்தரவு - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: தவறான மருத்துவத்தால் உயிரிழந்த பெண்ணின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு

By

Published : Apr 1, 2021, 10:16 PM IST

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், "எனக்கு செல்ல பிரியா என்பவருடன் 2014ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி எனது மனைவி, இரண்டாவது மகன் ஆகியோருக்கு ஜலதோஷ பிரச்சினை இருந்தது.

இதனை அடுத்து மடகுப்பட்டி பகுதியிலுள்ள செந்தில் குமார் என்பவரது கிளீனிக்குக்கு மருத்துவம் பார்க்க சென்றோம். அங்கு செல்ல பிரியாவிற்கு மருத்துவர் 3 ஊசிகள் செலுத்தினார். மூன்றாவது ஊசி போடும் பொழுது செல்ல பிரியா மயக்கமடைந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துச் சென்றோம்.

அங்கு செல்ல பிரியா இறந்து விட்டதாக கூறி உடற்கூராய்விற்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். மீண்டும் செந்தில் குமார் கிளீனிக்குக்கு வந்து பார்த்தபோது கிளீனிக் மூடப்பட்டிருந்தது.

செல்ல பிரியா உடற்கூராய்வின் அறிக்கைகள் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, செல்ல பிரியா வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்" கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி தாரணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செல்ல பிரியா இறந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்தும், இந்த வழக்கு குறித்து குற்றப்பத்திரிகையை மூன்று மாதத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஒருபால் ஈர்ப்பாளர்கள் சேர்ந்து வாழ்வது குறித்து நீதிபதி அறிவுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details