மதுரை:தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழ்நாட்டில் ஹாக்கி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹாக்கி அசோசியேஷன் உள்ளது. இதிலிருந்து சிறப்பாக விளையாடும் ஹாக்கி வீரர்களைத் தேர்ந்தெடுத்து மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஹாக்கி அணிக்குப் பரிந்துரை செய்யப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் ஹாக்கி கிளப் அந்தந்த மாவட்டத்தில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஹாக்கி கிளப்பின் விதியின் படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், ஒரு சில ஹாக்கி கிளப்பை தவிர்த்து மற்ற ஹாக்கி கிளப்புகளில் தேர்தல் நடத்தப்படுவதில்லை. மேலும் சில ஹாக்கி கிளப்பில் அரசியல் பிரமுகர்கள் தலையீட்டின் கீழ் செயல்படுகிறது. இதனால் ஹாக்கி அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்வதில் ஒருதலைப்பட்சமாக சிலர் செயல்படுகிறார்கள்.