மதுரை:கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரைச் சேர்ந்த வேல்முருகன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி பெண்கள் உயர்நிலைப்பள்ளியானது, திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தொடங்கப்பட்ட பழமையான பள்ளி. கல்வி மற்றும் விளையாட்டில் இந்த பள்ளி சிறந்து விளங்குவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களும் இங்கு வந்து படிக்கின்றனர். நகரின் மையப்பகுதியில் 4.2 ஏக்கர் பரப்பளவில் இந்த பள்ளி அமைந்திருந்தது. இங்கு பெரிய மைதானம் இருந்தது.
பள்ளியின் இடம்
இந்தநிலையில் அந்த மைதானத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தண்ணீர் தொட்டி போன்றவற்றை அரசாங்கம் கட்டியது. இதனால் தற்போது இந்த பள்ளி வெறும் 50 சென்ட் நிலத்தில் தான் இயங்கி வருகிறது. பள்ளியின் இடம் சுருங்கியதால் இங்கு படிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.
இதுமட்டுமல்லாமல் இந்த பள்ளி மைதானத்தில் அரசு குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் ஆகியவற்றை கட்டுவதற்கு முயற்சிகள் நடக்கின்றன. அந்த கட்டடங்கள் கட்டப்பட்டால் பள்ளியில் படிப்பவர்களின் கல்வி மற்றும் உடற்கல்வி பாதிக்கப்படும். இது அடிப்படை உரிமையை பறிப்பதாக அமையும்.
குழந்தைகள் நலக் காப்பகம்