மதுரை:மதுரை அரசரடியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், " பொன்மேனி பிரதான சாலையில் மீனாட்சி நகர் அமைந்துள்ளது. இங்கு இரண்டு தெருகளுக்கு மீனாட்சி நகர் முதலாவது தெரு மற்றும் இரண்டாவது தெரு என பெயரிடப்பட்டு 1991 முதல் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் கடந்த 2021 நவம்பரில் ராஜ் பிள்ளை தெரு என தேர்தலுக்கு முன்பாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு தெருக்களின் பெயர்களில் சாதிப் பெயர்களை இருக்கக் கூடாது என அறிவித்துள்ளது. ராஜ் பிள்ளை என ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வைத்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே மனுதாரரின் மனுவின் அடிப்படையில் சாதி பெயரில் அமைந்த தெரு பெயரை நீக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.