தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நூலகங்கள் திறப்பதற்கு அனுமதி கோரிய வழக்கு முடித்துவைப்பு! - Order of the Madurai High Court

மதுரை: தமிழ்நாட்டில் நூலகங்கள் திறப்பதற்கு அனுமதி கோரிய வழக்கில் நூலகங்கள் திறக்க தமிழ்நாடு அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது என கூறி வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நூலகங்கள் திறப்பதற்கு அனுமதி கோரிய வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
நூலகங்கள் திறப்பதற்கு அனுமதி கோரிய வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

By

Published : Aug 28, 2020, 5:54 PM IST

Updated : Aug 28, 2020, 6:49 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன் முருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மற்றும் நூலகங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 32 மாவட்ட நூலகம், 1926 கிளை நூலகம், 14 மொபைல் நூலகம், 1915 கிராம நூலகம், 745 பகுதிநேர நூலகம் செயல்பட்டு வருகின்றன. ஆனால் கரோனா நோய்த்தொற்றின் காரணமாக தற்போது வரை நூலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மேலும் இதனால் தகுதி தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை சந்திக்க மாணவர்கள் தங்களைத் தயார் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உடற்பயிற்சிக்கூடம் மற்றும் வங்கிகள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன.

கரோனா ஊரடங்கில் விடுமுறையில் இருக்கும் மாணவர்கள் தங்களது நேரங்களை முறையாக செயல்படுத்துவதற்கு நூலகங்கள் திறக்கப்பட வேண்டும். எனவே, தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்தும் உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் சார்பில் நூலகங்கள் திறப்பதற்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது என கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாட்டில் நூலகங்கள் செப்டம்பர் 1 முதல் திறக்கப்படவுள்ளது எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Last Updated : Aug 28, 2020, 6:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details