தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயிர் காப்பீடு தொடர்பான வழக்கு - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு - மதுரை மாவட்ட செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் 2021-ஆம் ஆண்டில் நெல் மற்றும் சிவப்பு பீன்ஸ் பயிர்களுக்கும் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த கோரிய வழக்கில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு
மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

By

Published : Oct 25, 2021, 6:40 PM IST

மதுரை: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜீவகுமார், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், "டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் நெல் மற்றும் சிவப்பு பீன்ஸ் பயிரிடப்படுகிறது. இயற்கை சீற்றங்களால் பலமுறை டெல்டா மாவட்டங்களில் நெல் உள்பட பல பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு நெல் காப்பீடு தவிர்த்து பல பயிர்களுக்கு காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றம் காரணமாக நெல் பயிர்கள் அறுவடை செய்ய கூடிய காலத்தில் மாற்றம் ஏற்படுகிறது.

எனவே, 2021 ஆம் ஆண்டு காப்பீட்டின் கீழ் நெல் மற்றும் சிவப்பு பீன்ஸ் இரண்டையும் சேர்க்க அரசிற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி துரை சுவாமி அமர்வு வழக்கில் தஞ்சை மாவட்ட ஆட்சியரை எதிர்மனுதாரராக சேர்த்தும், வழக்கு குறித்து பதில்மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:தீபாவளி பர்சேசிங் - குவிந்த மக்கள் - காற்றில் பறந்த கரோனா நெறிமுறைகள்!

ABOUT THE AUTHOR

...view details