சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு தனியார் கம்பெனிகள் (இந்தியா சிமெண்ட் லிமிடெட் மற்றும் கிருஷ்ணா மைன்ஸ்) மணல் மற்றும் சுண்ணாம்புக் கல் எடுப்பதற்கு அனுமதி பெற்றுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து, புதூர், ராமையன்பட்டி ஆகிய பகுதிகளில் இந்த இரண்டு தனியார் நிறுவனங்களும் மணல் மற்றும் சுண்ணாம்புக் கல் எடுக்க அனுமதி பெற்று அரசு அனுமதி அளித்த அளவை விட அதிகமாக எடுத்து வருகின்றனர்.
இதனால் தமிழ்நாடு அரசுக்கு நூறு கோடிக்கும் மேல் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மணல் மற்றும் சுண்ணாம்புக் கல் சட்டவிரோதமாக எடுப்பதற்கு சில அரசு அலுவலர்கள் துணையாக இருக்கின்றனர்.