தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரி கடற்கரையில் நிரந்தர கட்டடங்கள் கட்ட தடைகோரிய வழக்கு: நீதிமன்றம் உத்தரவு - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்

மதுரை: கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் நிரந்தர கட்டடங்கள் கட்ட தடைகோரிய வழக்கில் அம்மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பவும், நிரந்தரக் கடைகள் அமைக்கும் இடத்தை பற்றி குமரி பேரூராட்சி செயல் அலுவலர் புகைப்படத்துடன் கூடிய அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டும் வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.

Case seeking ban on construction of permanent buildings in Kanyakumari beach area
Case seeking ban on construction of permanent buildings in Kanyakumari beach area

By

Published : Sep 4, 2020, 10:05 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியைச் சேர்ந்த ஜான் மில்டன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.

அதில், கன்னியாகுமரி தமிழ்நாடு சுற்றுலாத் தலங்களில் மிக முக்கியமானது. மூன்று கடல்கள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடமாகும் பல சுற்றுலா இடங்களையும் கொண்டதாக இருந்துவருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் பலர் இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டினரும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரி பகுதியில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் காலையில் சூரிய உதயம், மாலையில் சூரிய மறைவை பார்ப்பதற்காக வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி கடற்கரை அருகே சன்செட் பஜார் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட நபர்கள் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்துவந்தனர். இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு கடற்கரையின் அழகை மறைப்பதாகக் கூறி தற்காலிக கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

மேலும் கடற்கரை அருகே 600 கடைகளுடன் நிரந்தர கடைகள் அமைப்பதற்கான வேலைகளை கன்னியாகுமரி நகராட்சி மேற்கொண்டுவருகிறது.

கடற்கரை அருகே கட்டப்பட்டுவரும் நிரந்தர கடைகளை தற்காலிகமாக நிறுத்தி உத்தரவிட வேண்டும் என்றும், கன்னியாகுமரி கடற்கரை அருகே உள்ள பகுதிகளில் கட்டடங்கள் அமைப்பதற்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் 600 கடைகள் ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது எனவும் அதற்கான இடம் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது எனக் கூறப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டும், நிரந்தர கடைகள் அமைய உள்ள இடம் குறித்து குமரி பேரூராட்சி செயல் அலுவலர் புகைப்படத்துடன் கூடிய அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கை அக்டோபர் ஒன்றாம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details