தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான வழக்கு - madurai district news

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலர்,இயக்குனர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

case-related-to-the-appointment-of-postgraduate-teachers
case-related-to-the-appointment-of-postgraduate-teachers

By

Published : Sep 22, 2021, 6:40 AM IST

மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், "தமிழக அரசு, அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதனடிப்படையில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் ஒரே பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

ஆனால் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் வெவ்வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்கள் முதுநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் திறம்பட கற்பிக்க இயலாத நிலை உருவாகும். ஆகவே, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் விதிகள் பொருந்தும் என உத்தரவிட்டு, அதனை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி முரளிசங்கர் அமர்வு, இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலர், இயக்குனர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க : கடிதம் மூலம் பிடிஆர்-ஐ கண்டித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

ABOUT THE AUTHOR

...view details