தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுனாமி வந்தால் என்ன செய்வது?.. கன்னியாகுமரியில் கடைகள் அமைக்க அரசு எதிர்ப்பு.. - tsunami

அவசர காலங்களில் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதி வழியாக மக்கள் வெளியேறுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

திரிவேணி சங்கமம்
திரிவேணி சங்கமம்

By

Published : May 11, 2022, 7:09 PM IST

கன்னியாகுமரியை சேர்ந்த சிவா என்பவர் , உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.
அதில் தான் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் தொடர்ந்து பேட்டரி கார்களை வாடகைக்கு கொடுத்து தொழில் செய்ய அனுமதிக்குமாறு பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கானது நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், சுனாமி பேரிடர் உள்ளிட்ட அவசர காலங்களில் மக்கள் திரிவேணி சங்கமம் பகுதி வழியாக மட்டுமே வெளியேற முடியும் என்பதால் அங்கு மனுதாரர் தொழிலில் ஈடுபடுவதை ஏற்க இயலாது என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி சி.சரவணன் மனுதாரருக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்து , வழக்கினை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: ’அயன்’ பட பாணியில் போதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு நீதிமன்றக் காவல்

ABOUT THE AUTHOR

...view details