தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவகாரத்து வழக்குக்காக வந்தவரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கறிஞர்

விவகாரத்து வழக்குக்காக தன்னிடம் வந்த நபரின் 3 கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிப்பு செய்ததற்காக வழக்கறிஞர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

By

Published : Dec 17, 2022, 9:29 AM IST

ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!
ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!

மதுரை:மேலூர் அருகேயுள்ள நாவினிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் விவாகரத்து வழக்குக்காக மேலூர் பால்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்துல்காதரை அணுகியுள்ளார். இந்த வழக்கறிஞர் அப்துல்காதர் பல்வேறு காரணங்களை சொல்லி ஜெகநாதனின் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தன்னுடைய பெயருக்கு மாற்றம் செய்துள்ளார்.

இதனை உணர்ந்த ஜெகநாதன், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து நம்பிக்கை மோசடி செய்த வழக்கறிஞர் அப்துல்காதர் மீது மேலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் கூறுகையில், “இது போன்ற மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:மதுரையில் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த போலி மருத்துவர் கைது

ABOUT THE AUTHOR

...view details