தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் கையாடல் செய்த பெண் மீது வழக்குப் பதிவு! - கையாடல் செய்த பெண்

மதுரை: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் கிளை அமைப்பான தமிழ்நாடு உணவுப்பொருள் கிடங்கில் பணியாற்றிவரும் பெண் காசாளர் மீது காவல்துறையினர் மோசடி புகாரின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Case registered against a woman who handled the Tamil Nadu Chamber of Commerce and Industry
Case registered against a woman who handled the Tamil Nadu Chamber of Commerce and Industry

By

Published : Sep 2, 2020, 7:26 PM IST

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்திற்கு சொந்தமான, தமிழ்நாடு உணவு பொருள் கிடங்கு மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள அலுவலகத்தில் பணியாற்றி வந்த பிரேமா என்ற பெண், அலுவலகத்தின் வங்கிக் கணக்கிலிருந்து முறைகேடாக சுமார் 6 லட்சத்து 5 ஆயிரத்து 782 ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக தணிக்கை அலுவலர், புகார் அளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு உணவுப்பொருள் கிடங்கு மேலான இயக்குநரும், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவருமான ரத்தினவேல், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், கூடல் புதூர் காவல் நிலையத்தில் பிரேமா மீது மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ABOUT THE AUTHOR

...view details