மதுரை:திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த வைந்தியநாதன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்து இருந்தார். அதில், "நான் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பிரசாத ஸ்டால் வைத்துள்ளேன். ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் 2024ஆம் ஆண்டு ஜூன் 30 வரை ஸ்ரீபண்டாரம், பணியாரப்போடு, சத்திரப்போடு மற்றும் பிரசாத ஸ்டால் அமைப்பதற்கான இ-டெண்டர் அறிவிப்பை கோயிலின் இணை ஆணையர் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள தகுதியானவர் என கூறப்பட்டுள்ளது. நான் பிராமணர் (ஐயர்) சமுதாயத்தைச் சேர்ந்தவன். நான் வைஷ்ணவ சம்பிரதாயத்தை பின்பற்றாததால் என்னால் ஏலத்தில் பங்கேற்க முடியவில்லை.