தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனி கோயிலில் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மாடுகள் தீவனமின்றி உயிரிழப்பு? - இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க நீதிமன்றம் ஆணை!

பழனி கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்படும் பசு மாடுகள் உயிரிழப்பதாக வழக்கு தொடரப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யக்கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 11, 2023, 10:36 PM IST

மதுரை:திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. பழனி முருகன் கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் தைப்பூசம், ஆடி கிருத்திகை உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த கோயிலுக்குப் பக்தர்கள் பொருள்களையும், நிலங்களையும் நன்கொடையாக வழங்கி உள்ளனர். பழனி முருகன் கோயிலுக்குப் பணம், நகை மட்டுமின்றி பசுக்களையும் காணிக்கையாகப் பக்தர்கள் கொடுக்கின்றனர். அவ்வாறு பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்படும் பசுக்கள் கோயிலுக்குச் சொந்தமான 220 ஏக்கர் இடத்தில் உள்ள ‘கோ’ சாலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பசுக்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் பணியாளர்கள், மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், பழனி கோ சாலையில் 17 மாடுகள் போதிய உணவு மற்றும் தீவனமின்றி இறந்துள்ளதாகக் கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், பழனி முருகன் கோயில் கோ சாலையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது.

எனவே பசுக்களின் நிலை குறித்த உண்மையை வெளிப்படுத்தவும், மீதமுள்ள பசுக்களின் உயிரைக் காப்பாற்றவும் வழக்கறிஞர் ஆணையம் அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். பழனி முருகன் ‘கோ சாலை’ தொடர்பான உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்” எனத் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தர் பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோ சாலையில் உள்ள மாடுகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்படும் மாடுகள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அந்த பயனாளிகளின் பட்டியல் கோயில் நிர்வாகத்தால் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், கொடுக்கப்பட்ட மாடுகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விளம்பர நோக்கில் போடப்பட்ட வழக்கு எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் கோ சாலைகளில் பசுமாடுகள் பராமரிப்பு குறித்தும் எத்தனை மாடுகள் பயனாளிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது பயனாளிகள் பட்டியல் முழு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:குமாரவயலூர் கோயில் அர்ச்சகர்களின் பணி நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவிற்கு தடை..!

ABOUT THE AUTHOR

...view details