தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு ஊழியர்கள் குறித்து அவதூறு - இருவர் மீது வழக்கு - அரசு ஊழியர்கள் குறித்து அவதூறு

மதுரை: அரசு பணி நிமித்தம் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Case against two persons defaming govt staffs
Case against two persons defaming govt staffs

By

Published : May 2, 2020, 2:57 PM IST

மதுரை மாநகர் ஆரப்பாளையம் புட்டுத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி கார்த்திகேயி. இவர் மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டங்களை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

மதுரை மெயின் ரோடு காந்திஜி காலனியில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணியில் தனது சக ஊழியர் பார்வதியோடு இணைந்து ஈடுபட்டிருந்தார். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த இரண்டு பேர் கார்த்திகேயி மற்றும் பார்வதியிடம் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் பொதுமக்களிடம் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்ததை பதிவு செய்து முகநூலில் அரசு ஊழியர்கள் இருவரையும் திருட்டு கும்பல் என குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, கார்த்திகேயி மதுரை எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் கார்த்திகேயி மீது அவதூறு செய்திகளை முகநூலில் வெளியிட்ட இருவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:மதப்பிரிவினையை ஊக்குவிக்கும் போலி செய்திகள்: ஓய்வுபெற்ற ராணுவ அலுவலர் மீது வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details