மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'அமைச்சர் பதவியை பயன்படுத்தி 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு ஒத்திவைப்பு - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
மதுரை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கின் முதற்கட்ட விசாரணை அறிக்கையை, லஞ்ச ஒழிப்பு இயக்குநர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 1996ஆம் ஆண்டில் திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்தது முதல் தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க மதுரைக் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் லஞ்ச ஒழிப்பு இயக்குநர் சார்பில் விசாரணை குறித்த 6ஆவது அறிக்கை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சொத்துக்குவிப்பு புகாரின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து விசாரணையின் முதற்கட்ட அறிக்கையை மாநில கண்காணிப்பு கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.